முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 1, 2011

மண்ணில் புதைந்த 3 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு

ஈரோடு: ஈரோடு சம்பத்நகரில் ஒரு தனியார் மருத்துவமனை கட்டுமானப்பணி நடக்கிறது. 3 அடுக்கு மாடி கட்டிடம் கட்ட 20 அடி ஆழத்துக்கு மண் தோண்டும் பணி நேற்று நடந்தது. பக்கத்து கட்டிட காம்பவுண்ட் அடிப்பகுதியில் அதிகளவில் பொக்லைன் மூலம் மண் எடுக்கப்பட்டதால் காம்பவுண்ட் சரிந்துவிழுந்தது. இதில், 8 தொழிலாளர்கள் சிக்கினர். மக்கள் ஓடிவந்து 5 தொழிலாளர்களை காயமின்றி காப்பாற்றினர். 3 தொழிலாளர்களை மண் மூடியது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு வந்து, மண்ணில் புதைந்த மாரிமுத்து(36), மேற்கு வங்கத்தை சேர்ந்த மிண்டுமண்டல்(20), ஜாடுமண்டல் (42) ஆகியோரை சமயோசிதமாக மீட்டனர்.

தீயணைப்பு உதவி கோட்ட அலுவலர் சந்திரகுமார் கூறுகையில், ‘மண்ணை மூடிய தொழிலாளர்களை உயிருடன் மீட்பது சவாலானது. 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பங்கு மகத்தானது. மண்ணில் புதைந்த தொழிலாளர்கள் மயங்கி கிடந்தபோது, செயற்கை சுவாசம் மற்றும் சலைன் டிரிப்பை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கொடுத்தனர். இதனால் இவர்களைக் காப்பாற்ற முடிந்தது’ என்றார்.

No comments:

Visitors