கடந்த மார்ச் மாதத்தில் சாமியார் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்குப் பிறகு நடிகை ரஞ்சிதா பற்றி தலைமறைவாகினார். இந்நிலையில் தற்போது நடிகை ரஞ்சிதா சாமியார் நித்யானந்தாவுடன் வீடியோ காட்சி வெளியான பிறகு தாம் எந்த ஏட்டுக்கும் பேட்டி தரவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் தமது பெயரில் வெளியான பேட்டிகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்றும் கடந்த மார்ச் 2 ல் வீடியோ வெளியானவுடன் தாம் அமெரிக்கா சென்றுவிட்டதாகவும் ரஞ்சிதா தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வீடியோ காட்சிகளை வெளியிட்டவர்கள் மீது கர்நாடகா போலீசில் புகார் அளிக்கப் போவதாகவும் நடிகை ரஞ்சிதா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment