முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 1, 2011

விமான கட்டணம், இன்று முதல் உயர்வு

புதுடெல்லி, ஜன.1-
 
எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கிங் பிஷர் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய இரு தனியார் நிறுவனங்கள், உள்நாட்டு விமான கட்டணத்தை இன்று முதல் உயர்த்தி உள்ளன. மத்திய அரசின் எண்ணை நிறுவனங்கள், விமான பெட்ரோல் விலையை இன்று நள்ளிரவு முதல் ஏறத்தாழ 2 சதவீதம் உயர்த்தப்படும் என்று அறிவித்தது.

கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இது 6-வது விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து இரு விமான நிறுவனங்களும், உள்நாட்டு போக்குவரத்து விமானங்களுக்கான கட்டணத்தை ரூ.200 வரை உயர்த்தி உள்ளன.

750 கிலோ மீட்டர் தூரம் வரை 100 ரூபாயும், 750 கி.மீட்டர் தூரத்துக்கு அதிகம் உள்ள இடங்களுக்கு ரூ.200-ம் உயர்த்தப்பட்டு உள்ளது. புத்தாண்டு தினமான இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

No comments:

Visitors