முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 1, 2011

புத்தாண்டு முதல் அமெரிக்க நீர்மூழ்கியில் 'தம்' அடிக்க தடை

வாஷிங்டன்: அமெரிக்க கடற்படையில் 73 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இவற்றில் 13 ஆயிரம் வீரர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 40 சதவீதம் பேர் சிகரெட் புகைப்பவர்கள். வீரர்களின் சிகரெட் புகையை, நீர்மூழ்கி கப்பல்களில் உள்ள காற்று சுத்திகரிப்பு இயந்திரங்கள் சுத்தம் செய்துவிடும். அப்படியிருந்தும் நீர்மூழ்கி கப்பல்களுக்குள் காற்றை சோதனை செய்தபோது, மாசு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகம் இருந்தது.

இதனால் சிகரெட் புகைக்காத 60 சதவீத வீரர்களுக்கு பாதிப்பு அபாயம் உள்ளது தெரியவந்தது. இதை தவிர்க்க அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்களில் புத்தாண்டு (நாளை) முதல் 'தம்' அடிக்க தடை விதிப்பதாக நீர்மூழ்கி கப்பல்களின் கமாண்டர் வைஸ் அட்மிரல் ஜான் டோன்லி உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க ராணுவ வளாகத்தில் புகை பிடிப்பதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பின் இப்போது, நீர்மூழ்கி கப்பலுக்குள் புகைப்பிடிக்க தடை விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Visitors