முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 1, 2011

லட்சுமண், ஜாகீர்கானுக்கு பாராட்டு: வீரர்களின் கூட்டு முயற்சியால் வெற்றி; டோனி சொல்கிறார்

டர்பன், டிச. 30-
 
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பன் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 87 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் “நம்பர் 1” அணி என்பதை நிரூபித்துவிட்டது.
 
செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்னில் மோசமாக தோற்றது. தற்போது டர்பன் டெஸ்டில் வெற்றி பெற்று சரியான பதிலடி கொடுத்தது.
 
இந்தியாவின் இந்த வெற்றிக்கு லட்சுமண், ஜாகீர்கான், ஹர்பஜன்சிங் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தார்கள். லட்சுமண் முதல் இன்னிங்சில் 38 ரன்னும், 2-வது இன்னிங்சில் 96 ரன்னும் எடுத்தார்.
 
2-வது இன்னிங்ஸ் அவரும், ஜாகீர்கானும் சேர்ந்து 8-வது விக்கெட்டுக்கு 70 ரன் எடுத்து முக்கிய அம்சமாகும். ஜாகீர்கான் ஹர்பஜன்சிங் ஆகியோர் தலா 6 விக்கெட் கைப்பற்றினார்கள். 2-வது இன்னிங்சில் ஸ்ரீசாந்த் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
தென்ஆப்பிரிக்காவில் இந்தியா பெற்ற 2-வது வெற்றியாகும். இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு ஜோகன்ஸ் பர்க் மைதானத்தில் முதல் வெற்றியை பெற்று இருந்தது.
 
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:-
 
வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது. அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடி இந்த வெற்றியை பெற்றோம். இது மிகவும் பெருமையாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்தனர்.
 
தற்போது எல்லா நிலையிலும் சிறப்பாக இருப்பதாக உணருகிறேன்.
 
காலிஸ், டிவில்லியர்ஸ் சிறந்த பேட்ஸ்மேன்கள். இருவருமே கடந்த கால தொடர்களில் சிறப்பாக ஆடியவர்கள். அவர்களை அவுட் செய்துவிட்டால் நெருக்கடி கொடுத்து விட முடியும் என்று நினைத்தோம். சரியான நேரத்தில் இருவரையும் அவுட் செய்தது மிகவும் முக்கியமானதாகும்.
 
ஜாகீர்கானின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. இளம் வீரர்களுக்கு அவர் சிறந்த வழிக்காட்டியாக திகழ்கிறார். மற்ற பவுலர்களுக்கு அவர் நுணுக்கங்களை சொல்லி கொடுக்கிறார். இதனால் பயிற்சியாளரின் பணியை அவர் 50 சதவீதம் குறைத்து விடுகிறார்.
 
அவரது பந்து வீச்சு மிகவும் நேர்த்தியாக இருந்தது. அவர் தென்ஆப்பிரிக்காவுக்கு  மிகுந்த நெருக்கடி கொடுத்தார்.
 
லட்சுமணின் இன்னிங்ஸ் சிறப்பானது. அவர் எப்போதுமே சிறப்பாக ஆடக் கூடியவர். டர்பன் ஆடுகளத்தில் சிறப்பாக பேட்டிங் செய்வது சவாலானதே.
 
இவ்வாறு டோனி கூறினார்.
 
இந்த வெற்றி மூலம் 3 டெஸ்ட் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 2-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.

No comments:

Visitors