புதுடெல்லி: டெல்லியை ஒட்டிய நொய்டா பகுதியில் 2005-06ம் ஆண்டுகளில் ஏராளமான பெண் குழந்தைகள் காணாமல் போயினர். இதில் 17 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் நொய்டாவில் உள்ள தொழிலதிபர் மொனிந்தர்சிங் வீட்டுக்கு அருகில் உள்ள சாக்கடையில் 2006 டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தொழிலதிபரும், அவரது வீட்டு வேலைக்காரனும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் வேலைக்காரன் சுரேந்திரகோலிக்கு கடந்த வாரம் 4வது மரண தண்டனை வழங்கப்பட்டது. இதற்கிடையே, டெல்லியில் காணாமல் போகும் குழந்தைகள் குறித்த விவரத்தை மக்கள் உரிமை என்ற அரசு சாரா அமைப்பு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் போலீசிடமிருந்து பெற்றுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு மட்டும் 2161 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அதாவது சராசரியாக நாள் ஒன்றுக்கு 8 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 603 குழந்தைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

No comments:
Post a Comment