வாஷிங்டன்: மக்கள் தொகைப் பெருக்கத்தில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த இரு நாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன நிலையில் மக்கள் தொகைப் பெருக்கத்தில் அடுத்த 15 ஆண்டுகளில் சீனாவை விட இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இப்போது இதில் இந்தியாவைக் காட்டிலும் சீனா உறுதியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், 2025ம் ஆண்டில் சீன மக்கள் தொகையை விட இந்தியாவில் அதிக மக்கள் தொகை இருக்கும். இத்தகவலை அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி 2025ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 136.60 கோடியாக இருக்கும். ஆனால் முன்னர் இது 136.40 கோடியாக இருக்கம் என மதிப்பிடப்பட்டது. ஆனால் இப்போது 20 லட்சம் பேர் கூடுதலாக இருப்பர் என தெரியவந்துள்ளது. 2050ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 165.60 கோடியாக இருக்கும்.
அப்போது சீனாவின் மக்கள் தொகை 130.30 கோடியாக இருக்கும்.இப்போது சீனாவின் மக்கள் தொகை 133 கோடியாக உள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 117.30 கோடியாகும். அமெரிக்காவின் மக்கள் தொகை எண்ணிக்கை 31 கோடியாகும். 2025ம் ஆண்டில் அமெரிக்காவின் மக்கள் தொகை 35.70 கோடியாகவும், 2050ல் 43.90 கோடியாகவும் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment