Jan 1, 2011
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 40 உயருகிறது
சென்னை: கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 92 டாலராக உயர்துள்ளதால், மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்கு கணிசமான நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. சமையல் எரிவாயு, டீசல் ஆகியவற்றின் விலை, இறக்குமதி விலையை விடக் குறைவாக விற்பனை செய்யப்படுவதால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு 225 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு 35 முதல் 40 ரூபாய் வரை உயரும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சக செயலாளர் எஸ்.சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment