முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 31, 2010

கம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் “சிப்” விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

லண்டன், டிச 30-
 
நாம் இப்போது பயன்படுத்தும் வெர்சன் கம்ப்யூட்டர் வேகத்தை மிக பல மடங்கு அதிகரிக்கும் தொழில் நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர்.
 
இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானி கள் ஆய்வு நடத்தினார்கள். அவர்கள் புதிய “சிப்” ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் கம்ப்யூட்டரை அதிவேகமாக செயல்பட வைக்க முடியும்.
 
பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள பிராசசர் மைக்ரோ “சிப்”பில் பொதுவாக 2 அல்லது 4 பாகங்கள் இருக்கும் சில “சிப்”களில் 16 பாகங்கள் வரை இருக்கும்.  
 
இப்போது விஞ்ஞானி கள் உருவாக்கியுள்ள மைக்ரோ “சிப்”பில் 1000 பாகங்களை உருவாக்க முடியும். இதனால் இந்த கம்ப்யூட்டர் தற்போதைய கம்ப்யூட்டரைவிட 20 மடங்கு வேகமாக வேலை செய்யும். இது பெர்சனல் கம்ப்யூட்ட ராக இருந்தாலும் அதிநவீன கம்ப்யூட்டரை விட சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
 
இந்த கம்யூட்டர் இன்னும் சில வருடங்களில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்

No comments:

Visitors