முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 31, 2010

முகமதுநபி கார்ட்டூன் வெளியிட்ட டென்மார்க் பத்திரிகை அலுவலகத்தை தாக்க முயற்சி; 5 பேர் பிடிபட்டனர்

கோபன்ஹெகன்,  டிச 30-
 
டென்மார்க் நகரில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று 2005-ம் ஆண்டு முகமது நபி கார்ட்டூனை வெளியிட்டது. இதற்கு உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து கோபன் ஹெகனில் உள்ள அந்த பத்திரிகை அலுவலகத்தை தாக்க பல முறை முயற்சி நடந்தது. வெளிநாடுகளில் இருந்த டென்மார்க் நாட்டு தூதரகங்களும் தாக்கப்பட்டன.
 
இந்த நிலையில் அந்த பத்திரிகை அலுவலகத்தை மீண்டும் தாக்க முயற்சி நடந்து உள்ளது. இதற்காக கிட்சா நகரில் சிலர் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
 
உளவுப்படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அங்கு இருந்த 3 பேரை கைது செய்தனர். இன்னொரு இடத்தில் பதுங்கி இருந்த வேறு ஒருவரையும் கைது செய்தனர்.
 
அவர்களிடம் இருந்து ஒரு ஏந்திர துப்பாக்கி மற்றும் பல்வேறு வெடிகுண்டு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சுவீடன் நாட்டில் ஒருவரை கைது செய்தனர்.
 
பிடிபட்ட 5 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் முக்கிய தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
 
கைதானவர்களில் 2 பேர் தூனுசியா நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் லெபனானை சேர்ந்தவர். மற்றொருவர் சுவீடனை சேர்ந்தவர் இன்னொருவர் டென்மார்க் நாட்டில் வசிக்கும் ஈராக் அகதி.

No comments:

Visitors