முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 8, 2011

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் தெண்டுல்கர், காலிஸ் முதலிடம்

துபாய், ஜன.8- 
ஐ.சி.சி. டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர், தென் ஆப்பிரிக்க வீரர் காலிஸ் கூட்டாக முதலிடம் பிடித்துள்ளனர். இருவரும் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
 
தர வரிசையில் முதலிடத்தில் இருந்த இலங்கை வீரர் சங்கக்கரா 2 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு 3-வது இடத்தில் உள்ளார். சேவாக் 2 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு 6-வது இடத்தில் உள்ளார். லட்சுமண் தொடர்ந்து 9-வது இடத்தில் உள்ளார். காம்பீர் 15-வது இடத்தில் இருக்கிறார். பந்து வீச்சு தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர்கள் ஜாகீர்கான் 5-வது இடத்திலும் ஹர்பஜன் சிங் 8-வது இடத்திலும் உள்ளனர்.

No comments:

Visitors