புதுடில்லி : வடமாநிலங்களில் நிலவி வரும் கடும்குளிர் மற்றும் அடர் பனிமூட்டம் காரணமாக டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் டில்லியிலிருந்து புறப்படும் பல விமானங்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டில்லி வரும் பல சர்வதேச விமானங்கலும் மாற்று பாதை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. நேற்று இரவு 11 மணியளவில் காணப்பட்ட அடர் பனிமூட்டம் 11.20 மணிக்கு மேலும் அதிகரிக்கத் துவங்கியதால், போதி வெளிச்சம் இன்மை காரணமாக விமானங்கள் தாமதமாகவே புறப்பட்டு செல்கின்றன.
No comments:
Post a Comment