துபாய்: கள்ளச்சாராய விற்பனையில் எதிர்கோஷ்டியை சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில் 10 இந்தியருக்கு துபாய் நீதிமன்றம் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. துபாயின் ஜெபல் அலி பகுதியில் சாம்சங் நிறுவனத்தின் அலுவலகத்துக்கு பின்னால் 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
அதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளச் சாராய வியாபாரத்தில் இரு கோஷ்டிகள் இடை யே தகராறு நடந்த விஷயம் தெரிய வந்தது.
எதிர்கோஷ்டியை சேர்ந்த ஒருவரை கொலை செய்ததாக இந்தியர்கள் 10 பேர், ஒரு பாகிஸ்தானியரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீது தொடரப் பட்ட வழக்குகளில் துபாய் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இரண்டு இந்திய இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 8 இந்தியர்கள் 15 ஆண்டு சிறை தண்டனையும் பெற்றனர்.
No comments:
Post a Comment