முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 8, 2011

ஐ.பி.எல். வீரர்களின் ஏலம் இன்று தொடக்கம்!

பெங்களூர்: ஐபிஎல் சீசன் 4 20 ஓவர் கிரிக்கெட் ஏப்ரல் 8ந் தேதி முதல் மே 22ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஐபிஎல். போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் ஒப்பந்த விதிகளை மீறியதாக கிரிக்கெட் வாரியத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த ஐபிஎல் லில் மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெறுகிறது.

முதல் 3 ஐபிஎல் போட்டியுடன் இந்திய மற்றும் சர்வதேச வீரர்களுடனான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதால் அனைத்து வீரர்களும் புதியதாக ஏலம் விடப்படுகிறார்கள். இருப்பினும் முந்தைய சீசனில் தங்கள் அணிக்காக விளையாடிய வீரர்களில் 4 பேரை தொடர்ந்து வைத்துக்கொள்ளலாம் என்ற விதிப்படி டோனி, சுரேஷ் ரெய்னா, முரளிவிஜய், அல்பி மோர்கல் ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெண்டுல்கர், ஹர்பஜன்சிங், பொல்லார்ட், மலிங்கா ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷேவாக்கை டெல்லி டேர்டெவில்சும், விராட் கோக்லியை பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும், வார்னே, வாட்சன் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளன.

இந்த 12 வீரர்களை தவிர மொத்தம் 350 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். இதனையடுத்து வீரர்களின் ஏலம் இன்றும், நாளையும் பெங்களூரில் நடைபெறுகிறது.

No comments:

Visitors