மதுரை: மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் டாஸ் மாக்கடைகளில், மது விற் பனை 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்தாண்டு ரூ. 588 கோடி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மது விற்பனை டாஸ்மாக் கடைகள் மூலம் நடக்கிறது. மாதந்தோறும் புதிய மது வகைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
மது அருந்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட 9 தென் மாவட்டங்களில் 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ரூ. 588 கோடி விற்பனை அதிகரித்துள்ளது. இந்த மாவட்டங்களில் 2009ல் ரூ. 3ஆயிரத்து 16 கோடியே 87 லட்சத்திற்கு மது விற்பனையாகியுள்ளது. 2010ல் ரூ. 3ஆயிரத்து 605 கோடியே 45 லட்சத்திற்கு மது விற்கப்பட்டுள்ளது. சுமார் 20 சதவீதம் வரை கூடுதல் தொகைக்கு விற்கப்பட்டது டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment