சென்னை: காலநிலை மாற்றங்கள் குறித்த கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது:
இந்தியாவில் நீர் நிலைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டன. அவற்றை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை. இந்தியா 2020ம் ஆண்டில் வல்லரசாக மாறுவதற்கு நீர்நிலைகளும் நமக்கு முக்கிய தேவை. 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்த நீர்நிலைகளின் நிலையை தற்போதைய நிலையுடன் ஒப்பிட்டு பார்த்தால் பல விஷயங்கள் புரியும். சுகாதாரமில்லாத குடிநீரால் உலகம் முழுவதும் 1 நிமிடத்துக்கு 7 பேர் பலியாகின்றனர்.
இந்தியாவில் ஒரு நாளைக்கு 1,500 பேர் பலியாகின்றனர். குஜராத்தில் நீர்நிலைகளை நல்ல முறையில் பராமரிக்கின்றனர். குஜராத்தில் நீர் சேமிப்பில் தேசிய சராசரியைவிட 9 சதவீதம் அதிகம் உள்ளது. எல்லா விவசாய பயன்களுக்கும் தனியாக உயரழுத்த மும்முனை மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment