பீஜிங்: சீனாவில் பால் பவுடர் தயாரிப்பு நிறுவனங்கள், மெலமைன் என்ற ரசாயனத்தை கலப்படம் செய்வது 2008&ம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. பால்பவுடரின் புரோட்டீன் அளவை அதிகமாக காட்டுவதற்காக இதை கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பவுடர் பால் குடித்த குழந்தைகளின் கிட்னியில் கல் உருவானது. இதில் 6 குழந்தைகள் இறந்தனர். 30 ஆயிரம் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து மெலமைன் கலந்த நிறுவனங்கள் மீது சீன அரசு நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், சீன பால்பவுடரில் மெலமைன் மீண்டும் கலப்படம் செய்யப்பட்டிருப்பது தற்போது சோதனையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 96 பேரை சீன அரசு கைது செய்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடக்கிறது.
இந்நிலையில், சீன பால்பவுடரில் மெலமைன் மீண்டும் கலப்படம் செய்யப்பட்டிருப்பது தற்போது சோதனையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 96 பேரை சீன அரசு கைது செய்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடக்கிறது.
Nanri : thinakaran News
No comments:
Post a Comment