முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 16, 2011

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.54 உயர்வு

புதுடில்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.54 உயர்ந்தது. நேற்று நள்ளிரவு முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்ததை அடுத்து, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வந்தன. இதனால், பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என, கடந்த சில நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், அரசு தரப்பில் இதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், "எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் நஷ்டத்தைச் சமாளிக்க, மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் தர வேண்டும்' என, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம், பெட்ரோலிய அமைச்சர் முரளிதியோரா கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.50ம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் லிட்டருக்கு ரூ.2.54ம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ரூ.2.53ம் உயர்த்தின. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது. கடந்த டிச., 15 ல் தான் 3 பொதுத் துறை நிறுவனங்களும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.96 வரை உயர்த்தின. இந்நிலையில், ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக நேற்று பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல் மீதான விலை நிர்வாக கட்டுப்பாட்டு முறையை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு கைவிட்டது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம், உள்நாட்டில் பெட்ரோலிய நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ளலாம். ஆனாலும், பெட்ரோலிய அமைச்சகத்துடன் ஆலோசித்த பிறகே விலை உயர்த்தப் படுகிறது.

மதுரையில் ஒரு லிட்டர் 63.45 ரூபாய்: மதுரையில் நேற்றிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.75 ரூபாய் உயர்ந்தது. பழைய விலை ஒரு லிட்டர் ரூ.60.70. புதிய விலை 63.45 ரூபாய். டிச. 15 ல் மதுரையில் பெட்ரோல் லிட்டருக்கு 3.19 ரூபாய் உயர்ந்தது. கடந்த ஒரு மாதத்திற்குள் இருமுறையாக 5.94 ரூபாய் உயர்ந்துள்ளது.

No comments:

Visitors