முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 16, 2011

தடைகளை கடந்து இன்று வெளியானது காவலன்

டைரக்டர் சித்திக் இயக்கத்தில் விஜய்-அசின் நடித்துள்ள படம் காவலன். இப்படத்தை ஷக்தி சிதம்பரம் வாங்கி வெளியிடுகிறார்.டிசம்பர் மாதமே காவலன் பட வெளியாக இருந்தது.
ஆனால் காவலன் படத்தை திரையிட தொடர்ந்து எதிர்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. எனவே பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது.
 
தொடர்ந்து பிரச்சனைகள் அதிகரித்து வருவ‌தை பார்த்து கொந்தளிப்பு அடைந்த விஜய் நேரடியாக களத்தில் இறங்கி 'இதுவெறும் படம் மட்டுமல்ல என்னுடைய பிரஸ்டீஜ்' என்று வெளிப்படையாக கூறினார்.
 
இந்த நிலையில் எப்படியாவது படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்தே தீர வேண்டும் என்று நினைத்த விஜய் பிரட்சனைகள் அனைத்துக்கும் முற்றுப் புள்ளி வைத்தார். இந்த நிலையில் காவலன் படம் தடைகளை உடைத்து இன்று உலகமெங்கும் வெளியானது.

No comments:

Visitors