ராமநாதபுரம்: குடிபோதையில் டூவீலரை ஸ்டார்ட் செய்தால் தானாக ஆப் ஆகிவிடும் நூதன கருவியை ராமநாதபுரம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் உள்ள சுரேஷ்சுதாஅழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படிக்கும் மாணவன் முனீஸ்வரன். மாநில அள விலான ஜவஹர்லால்நேரு 37வது அறிவியல் கண்காட்சியில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக் கும் கருவியை காட்சிக்கு வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தார்.
இவரது கண்டுபிடிப்புக்கு 3வது பரிசு கிடைத்துள்ளது. இவர் புதுச்சேரியில் நடைபெறும் தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கண்டுபிடிப்பு குறித்து மாணவன் கூறுகையில், ‘ இந்த கருவியில் சென்சார், மெம்மரி ஐசி, பிரிசெட், ரெஸன்ஸ் போன்றவை பயன்படுத்தப்பட்டுள் ளது. குடித்து விட்டு டூவீ லரை ஸ்டார் செய்தால் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள மெமரி ஐசி மூலம் ஆல்கஹால் வாசனை நுகரப்பட்டு இன்ஜின் தானாக ஆப் ஆகிவிடும். குடிக்காத நபர் ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆகும்’ என்றார்.
Nanri :- Dhinakaran News

No comments:
Post a Comment