சென்னை: சட்டசபையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று ஒரு மசோதா தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டங்களில் விளம்பர பலகை என்ற வரையறைக்குள் தற்போது டிஜிட்டல் பேனர்களும் அடங்குகின்றன. அந்த விளம்பர பலகைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் பயன்படுத்துவதால் அதற்காக தனி வழிமுறையை செய்ய அரசு கருதுகிறது.
இதன்படி, விளம்பர அட்டைகளை நிறுவி அமைப்பதை முறைப்படுத்துவதன் பொருட்டு அதிகார அமைப்புகளிடம் இருந்து முன் அனுமதி பெறுவது, காட்சிக்கு வைக்கப்படும் கால அளவு, அதிகாரமற்ற பேனர்களை அகற்றுவது, அனுமதி வழங்கப்பட்ட கால அளவு முடிந்த பின்னர் அவற்றை பாதுகாப்பான முறையில் அழிப்பது ஆகியவற்றை வகைப்படுத்துவதற்காக நகராட்சி சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

Nanri :- Dhinakaran News
No comments:
Post a Comment