முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 4, 2011

உலக கோப்பை கிரிக்கெட்: மாலிக், அக்மலுக்கு வாய்ப்பு இல்லை

கராச்சி, ஜன 3-
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் தொடங்குகிறது.
 
 இந்தப் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் முன்னாள் கேப்டன் சோயிப்மாலிக், கமரன் அக்மல் ஆகியோர் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
 
சூதாட்ட புகார் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களின் வங்கி கணக்கை கேட்டு இருந்தது. இதுவரை இருவரும் வங்கி கணக்கை கொடுக்க தவறிவிட்டனர்.
 
 இதனால் இருவரும் உலக கோப்பையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் காரணமாக சல்மான்பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகிய 3 வீரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Visitors