முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 4, 2011

முகப்பருவை போக்க எளிய வழிமுறைகள்

சந்தனத்தை அரைத்து படிகாரம் கரைத்த தண்ணீரில் கலந்து பூசலாம். ரோஜா இதழ்களைப்  காய வைத்து பொடித்து  அதை ரோஸ் வாட்டரில் கலந்து முகத்தில் பூசலாம்.
 
புதினா இலையை  கழுவி நன்கு அரைத்து முகத்திலும்,கழுத்திலும் தேய்க்கவும்.அரை மணி நேரத்திற்க்கு பிறகு கழுகி விடவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு மறையும்.
 
முகப்பரு தழும்பு மாற 1டீஸ்பூன் முள்ளங்கி அரைத்து,  அதில் 1 டீஸ்பூன் மோரை கலக்கி முகத்தில் தேய்த்து அரை மணி நேரத்திற்கு பிறகு கழுகி விடவும்.
 
தினமும் ஐந்து அல்லது ஆறு முறை முகத்தைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். ஒரு நாளைக்கு ஐந்து  லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
 
பழங்கள், பழச்சாறு, கீரைகள், காய்கறிகளை  உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் பலகாரங்களைத் முழுவதும் தவிர்க்க வேண்டும். எலுமிச்சைச் சாறுடன் சிறிது வெந்நீர் கலந்து முகத்தை கழுவி வரலாம்.  வெள்ளைப் பூண்டை பாலில் வேக வைத்து அரைத்து முகத்தில் பூசலாம். இதை தினமும் செய்ய கூடாது.
 
கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய் கேக், ஐஸ்கிரீம், சாக்லெட், பாலாடை போன்றவற்றையும் பருக்களை கண்டிப்பாக சாப்பிட கூடாது.
 
முகப்பருவை கிள்ளுவதோ, அதலுள் இருக்கும் ரவை போன்ற பொருளை வெளியேற்ற அழுத்துவதோ கூடாது. இப்படி செய்வதால் முகப்பரு அதிகமாகும்.  

No comments:

Visitors