முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 4, 2011

3-வது டெஸ்ட்: சேவாக், டிராவிட் அவுட்; தென் ஆப்பிரிக்கா 362 ரன்னில் ஆல் அவுட்

கேப்டவுன் ஜன. 3-
 
இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது.   முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 232 ரன் எடுத்து இருந்தது.
 
காலிஸ் 81 ரன்னிலும்  பிரின்ஸ் 28 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.   இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. காலிசும் பிரின்ஸ்சும்  களம் வந்தனர். இருவரும் நிதானமாக விளையாடினர்.
 
சிறிது நேரத்தில் காலிஸ் சதம் அடித்தார். 84 ஓவரை ஸ்ரீ சாந்த் வீசினார். அந்த ஓவரில் பிரின்ஸ் போல்டு ஆனார். அவர் 47 ரன் எடுத்தார். 
 
பின்னர் வந்த வீரர்கள் யாரும் இந்திய பவுலிங்கை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆனார். காலிஸ் மட்டும் இந்திய பவுலிங்கை ஒரளவுக்கு தாக்கு பிடித்து  161 ரன் எடுத்து அவுட் ஆனார்.
 
இதனால் தென் ஆப்பிரிக்க அணி 362 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 
 
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா. தொடக்க வீரர்களாக ஷேவாக்கும், காம்பீரும் களம் இறங்கினர். இவர்கள் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை நிதானமாக எதிர்கொண்டு விளையாடி வந்தனர்.
 
சேவாக் 9 ரன் எடுத்த நிலையில் ஸ்டெய்ன் பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த டிராவிட் 5 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
 
இந்தியா 10.5 ஓவரில் 28 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்தது. அதன்பின் கம்பீருடன் தெண்டுல்கர் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர்.
 
இந்தியா நேரப்படி இரவு 7.30 மணி நிலவரப்படி இந்தியா 21 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன் எடுத்து விளையாடி வருகிறது. கம்பீரு 34 ரன்னுடனும் தெண்டுல்கர் 14 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.
 
ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்துள்ளது. காம்பீர் 65 ரன்களுடனும், தெண்டுல்கர் 49 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

No comments:

Visitors