முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 4, 2011

குட்டை பாவாடைக்கு தடை? இலங்கை அரசு திடீர் முடிவு

கொழும்பு: இலங்கையில், குட்டை பாவாடைக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுலா தலங்களுக்கு குறிப்பாக புத்த மடாலயங்களை பார்வையிட வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், கண்ணியமான உடைகளை அணியும் படி அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இதை முறைப்படி யாரும் பின்பற்றவில்லை. சமீபத்தில் வெளிநாட்டு பாப் இசை பாடகர் ஒருவர், ஆபாச உடை அணிந்த நடன மங்கைகள் புத்தர் சிலையை சுற்றி நடனமாடுவது போன்ற காட்சியை படமாக்கியிருந்தார். இதற்காக அவருக்கு இலங்கை விசா மறுக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் குட்டை பாவாடைகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆராயும் படி கலாசாரத்துறை அமைச்சர் ஏகநாயகே, சிறப்பு கமிட்டிக்கு உத்தரவிட்டுள்ளார். கலாசாரத்துறை செயலர் நிர்மல் ரூபசிங்கே குறிப்பிடுகையில், " குட்டை பாவாடைகளுக்கு தடை விதிப்பது குறித்த உத்தரவு விரைவில் வெளியாகும்' என்றார்.

No comments:

Visitors