முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 7, 2011

வேலியே பயிரை மேய்ந்தது; பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய போலீஸ் கமிஷனர் “சஸ்பெண்டு” செய்யப்பட்டார்

நகரி, ஜன 6-
 
ஆந்திர மாநிலம் விஜய வாடா நகர போலீஸ் கமிஷனராக இருப்பவர் சீதாராமாஞ்சனேயலு. இவர் தன்னிடம் அழகான பெண்கள் யாராவது புகார் செய்ய வந்தால் அவர்களது செல்போன் நம்பர்களை வாங்கி கொள்வார். பின்னர் அவர்களது அழகை வர்ணித்து சரமாரியாக ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவார்.
 
சில நிமிடங்கள் கழித்து அவர்களை போனில் தொடர்பு கொண்டு எஸ்.எம்.எஸ். எப்படி? உங்களுக்கு பிடிச்சிருக்கா? என்று கேட்டு தொந்தரவு செய்வார். இவரது ஆபாச தொல்லையால் ஏராளமான பெண்கள் வேதனை அடைந் தனர். அவர் மீது அக்கம் பக்கத்து போலீஸ் நிலை யங்களில் புகார் கொடுத்தனர்.
 
அப்போது போலீசார், கமிஷனர் மீதே புகார் கொடுக்கிறீர்களா? எவ் வளவு தைரியம் இருக்கிறது? உங்கள் மீது வழக்கு பதிவு செய்து ஜெயிலில் தள்ளி விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதனால் அவர்கள் வேறு செல்போன் நம்பர்களை மாற்றினர்.
 
இதே போல் கமிஷனர் டாக்டர் நம்ரதா, கல்லூரி பேராசிரியை கவிதா (பெயர் மாற்றம்) தொழில் அதிபர் லதா (பெயர் மாற்றம்) ஆகியோ ருக்கு கடந்த சில நாட்களாக ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுத்தார். இவர்கள் 3 பேரும் போலீஸ் கமிஷனருக்கு பாடம் புகட்ட முடிவு செய்தனர்.
 
இதன்படி அவர்கள் ஆந்திர போலீஸ் டி.ஜி.பி.யை சந்தித்து அவர் மீது புகார் கொடுத்தனர். இதையடுத்து இச்செய்தி அங்குள்ள தனியார் டி.வி.க் களில் வெளியானது.
 
இதனால் ஆந்தர முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து முதல்- மந்திரி கிரண்குமார் ரெட்டி, உள்துறை மந்திரி சபீதா இந்திரா ரெட்டி ஆகியோர் டி.ஜி.பி.யிடம் போலீஸ் கமிஷனர் சீதாராமாஞ்சனேயலு மீதான புகார் கள் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினர்.
 
இதையடுத்து போலீஸ் கமிஷனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப் பட்டது. விசாரணையில் அவர் ஏராளமான பெண் களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை டி.ஜி.பி. சஸ்பெண்டு செய்தார். ஆபாச எஸ்.எம்.எஸ். பற்றி டாக்டர் நம்ரதா கூறும் போது, சமூக விரோதிகள் யாராவது உங்களுக்கு ஆபாச தொல்லை கொடுத்தால் கமிஷனர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இப்படி ஒரு பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு வேலியே பயிரை மேய்வது வேத னையாக இருந்தது. இவரால் நிறைய குடும்ப பெண்கள் பாதிக்கப்பட்டதால்தான் புகார் செய்தோம். இப்படிப் பட்டவரை டிஸ்மிஸ் செய்து ஜெயிலில் தள்ள வேண்டும் என்றார்.

No comments:

Visitors