முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 7, 2011

ஒபாமா மனைவி மீண்டும் கர்ப்பம்; அமெரிக்க பத்திரிகை தகவல்

வாஷிங்டன், ஜன 6-
 
அமெரிக்க அதிபர் ஒபாமா மிச்சேலி தம்பதிகளுக்கு மலியா (வயது 11), ஷாஷா (9) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மலியா 1999-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதியும், ஷாஷா 2001-ம் ஆண்டு ஜூன் 10-ந்தேதியும் பிறந்தனர்.
 
இந்த நிலையில் மிச்சேலி மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது. அதில் மிச்சேலி 2 மாத கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு இந்த ஆண்டு ஜூலை இறுதியில் குழந்தை பிறக்கும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 
 
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராபர்ட்சிங்கிடம் கேட்டதற்கு இந்த தகவலை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என்றும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
 
ஏற்கனவே கனடா நாட்டை சேர்ந்த பெண் ஜோதிடரான நிக்கி 2011-ம் ஆண்டில் மிக்சேலி இரட்டை குழந்தைக்கு தாயாவார் என்று கூறி இருந்தார். இந்த நேரத்தில் மிச்சேலி கர்ப்பமாக இருக்கிறார் என்று செய்தி வெளி வந்து இருப்பதால் பலரும் இதை நம்புகின்றனர்.
 
ஒபாமா தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் கழித்தே முதல் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒபாமாவுக்கு இப்போது 49 வயதும், மிச்சேலுக்கு 46 வயதும் ஆகின்றன. அமெரிக்காவில் ஜனாதிபதியாக இருந்த போது கடைசியாக குழந்தை பெற்றவர் என்ற பெருமை ஜான் கென்னடிக்கு உண்டு.
 
ஜான்கென்னடி ஜனாதிபதியாக இருந்த போது அவருடைய மனைவி ஜாக்கு லினுக்கு 1963 ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. குறை மாதத்தில் பிறந்த இந்த குழந்தை பிறந்த 2 நாளிலேயே இறந்து விட்டது. ஒபாமாவை அமெரிக்கர்கள் அடிக்கடி கென்னடியுடன் ஒப்பிட்டு பேசுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Visitors