மதுரை : மதுரை அருகே ஏனாதி விக்ரம் பொறியியல் கல்லூரியில், நாளை காலை 9 மணிக்கு இன்போசிஸ் பி.பி.ஓ.,நிறுவனம் சார்பில் செயற்பணி அலுவலர் பணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. கலை, அறிவியலில் 55 சதவீதம் மதிப்பெண் மற்றும் இறுதியாண்டு அனைத்துப்பிரிவு மாணவர்கள் பங்கேற்கலாம்.
முதற்கட்டத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜன.,9 ல் நேர்காணல், தொழில் சார்ந்த இறுதித்தேர்வு நடைபெறும். நாளை மற்றும் மறுநாள் காலை 7.30 முதல் 8 மணிக்கு பெரியார், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுகளிலிருந்து கல்லூரி பஸ்கள் இயக்கப்படும். மேலும், 96009-55074, 96009-55075 ல் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment