முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 7, 2011

3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது

கேப்டவுன், ஜன. 6-
 
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.
 
தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 362 ரன்னில் “ஆல் அவுட்” ஆனது.   பின்னர் விளையாடிய இந்திய அணி  முதல் இன்னிங்சில் 364 ரன் எடுத்தது.   
 
அடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா  அணி ஒரு கட்டத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 130 ரன் என்ற நிலையில் இருந்தது. இதனால் இந்தியாவுக்கு எளிதான இலக்கு நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் காலிஸ் மிகவும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். காயத்தையும் பொருட்படுத்தாமல் அவர் சிறப்பாக விளையாடி அணியை காப்பாற்றினார். தென் ஆப்பிரிக்கா 341 ரன் குவித்து “ஆல் அவுட்”ஆனது.  
 
பின்னர் 341 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட் செய்தது. தொடக்க வீரர்களாக ஷேவாக்கும், காம்பீரும் களம் வந்தனர். இருவரும் தொடக்கத்தில் நிதானமாக விளையாடி வந்னர். ஷேவாக் 11 ரன் இருக்கும்  மார்க்கெல் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.  
 
பின்னர் களம் வந்த டிராவிட் பொறுப்புடன் விளையாடி வந்தார். மறுமுனையில் காம்பீர் அரை சதம் அடித்தார். இருவரும் விக்கெட்டை காப்பாற்றும் நோக்கத்துடன் விளையாடி வந்தனர்.
 
அதனைத் தொடர்ந்து 31 ரன்னில் டிராவிட் அவுட் ஆனார். கம்பீர் 64 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து 4விக்கெட் ஜோடியாக சச்சினும் லஷ்மணும் ஜோடி சேர்ந்தார்கள். இறுதியாக சச்சின்  14 ரன்களும் லஷ்மன்  32 ரன்களும் எடுத்தனர்.
 
இருவரும் கடைசி வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டனர். இதனால் போட்டி டிராவில் முடிந்தது.

No comments:

Visitors