முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 6, 2011

தாஜ்மகாலை அழகுபடுத்த தொல்லியல் துறை முடிவு

லக்னோ: தாஜ்மகாலை அழகுபடுத்த தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மகால் முழுவதும் பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. சுற்றுச் சூழல் மாசு காரணமாக தாஜ்மகாலின் வெண்மை நிறம் சற்று மங்கி உள்ளது. தாஜ்மகாலை அழகுபடுத்தவும் அதன் வெண்மையை ஒளிரச் செய்யவும் தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. அதற்காக, அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் முல்தானி மிட்டி எனப்படும் மண் கலவை தாஜ்மகால் மீது பூசப்படுகிறது. பின்னர், தூய்மையான தண்ணீரால் கழுவப்படுகிறது.

இதன் மூலம் தாஜ்மகால் தூய்மை பெற்று மேலும் பொலிவுடன் விளங்கும். இத்தகவலை இந்திய தொல்லியல் துறையின் ரசாயன பிரிவின் துணை சூப்பிரண்டென்ட் எம்.கே.சமதியா நேற்று தெரிவித்தார். தொல்லியல் துறையின் இயக்குநர் ஜெனரல் அனுமதி கிடைத்ததும் அழகுபடுத்தும் பணி விரைவில் துவங்கும் என்றும் தாஜ்மகாலுக்கு அருகிலேயே உள்ள தாஜ் மசூதியை அழகுபடுத்தும் பணி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும் சமதியா தெரிவித்தார்.

No comments:

Visitors