முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 6, 2011

“சிக்”கென்று உடை அணிந்து சென்ற பெண் டாக்டரிடம், சிறுவன் “செக்ஸ்” சில்மிஷம்; பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர்

சென்னை, ஜன. 5-  
 
அபிராமபுரம் பகுதியில் வசித்து வருபவர் மாசெல் (வயது 37). பெயர் மாற்றப் பட்டுள்ளது. பிசியோதெரபி பெண் டாக்டரான இவர் அபிராமபுரம் பாவா தெருவில் நேற்று இரவு 7 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். “சிக்”கென்று இருக்கமாக உடை அணிந்திருந்தார்.
 
அப்போது அவரது எதிரே 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் சைக்கிளில் வந்தான்.   திடீரென சைக்கிளை ஓரமாக நிறுத்திய சிறுவன், மாசெல் மீது பாய்ந்து அவரி டம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார்.
 
மாசெலின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர் கள் திரண்டு வந்தனர். கூட் டம் கூடுவதை பார்த்ததும் சிறுவன் ஓட்டம் பிடித் தான். ஆனால் அங்கிருந்தவர்கள் அவனை விரட்டிச்சென்று பிடித்தனர். பின்னர் அபிராம புரம் போலீஸ் நிலையத்தில் சிறுவன் ஒப்படைக்கப்பட் டான்.
உதவி கமிஷனர் கண்ணபிரான் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராயப் பன் சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்.  எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவரை செல்போனில் படம் எடுத்து வாலிபர் ஒருவர் இண்டர் நெட்டில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.
 
இது குறித்த புகாரின் பேரில் எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ரபீக் (வயது 22) என்ற வாலிபரை கைது செய்தனர்.

No comments:

Visitors