கேப்டவுன், ஜன.5-
இந்தியா - தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 362 ரன்களும், இந்தியா 364 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 2 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 341 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து இந்திய அணிக்கு 340 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணியில் காலிஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இது அவருக்கு 40-வது சதமாகும். காலிஸ் 109 ரன்கள் எடுத்து அவுட்டாக வில்லை. பவுச்சர் 55 ரன்களும், ஸ்டெயின் 32 ரன்களும் எடுத்தனர். பந்து வீச்சில் ஹர்பஜன் சிங் 7 விக்கெட்களை வீழ்த்தினார்.

No comments:
Post a Comment