முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 6, 2011

திருச்சி விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

திருச்சி: குடியரசு தினத்தையொட்டி வரும் 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை திருச்சி விமானநிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினத்தையொட்டி திருச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி விமான நிலையத்தில் நேற்று நடந்தது. விமான நிலைய கட்டுப்பாட்டு அலுவலர் தர்மராஜ் தலைமை வகித்தார். மத் திய தொழிலக பாதுகாப்பு படை துணை கமிஷனர் அரவிந்த் சவுகான் முன்னிலை வகித்தார்.

அனைத்து விமான நிறுவனங்களின் அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், குடியரசு தினத்தையொட்டி அசம்பாவி தம் ஏதும் நடைபெறாமல் தவிர்க்கவும், பாதுகாப்பு நடவடிக்கையாகவும் ஜனவரி 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கான அனுமதியை ரத்து செய்வது, விமான நிலையத்தின் உள்பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், வெளிப்பகுதியில் மாநகர போலீசாரும் பாதுகாப்பு பணிகளை அதிகப்படுத்துவது, 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் விமானநிலைய பாதுகாப்பை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

No comments:

Visitors