முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 17, 2011

லஞ்சம் கேட்ட அரசு அதிகாரி: அடித்து உதைத்த எம்.எல்.ஏ.

மும்ப‌ை: லஞ்சம் கேட்ட சுகாதரா அதிகாரியை தாக்கிய எம்.எல்.ஏ.மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்த பச்சுக்காடு ‌என்ற சுயேட்சை எம்.எல்.ஏ. , அங்குள்ள சுகாதராத்துறை அலுவலகம் சென்றார். அங்போது அங்கிருந்த சுகாதாரத்துறை அதிகாரி சந்திராவதன் ஹகாவானே (35) என்பவரை அணுகி, நிலுவையில் உள்ள சில பணிகளை முடிக்குமாறு கூறியுள்ளார்.இதற்கு சுகாதார அதிகாரி லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுயேட்சை எம்.எல்.ஏ. ,சந்திராவதனை சரமாரியாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தை நேரில் பார்த்த சக ஊழியர்கள் எம்.ஏல்.ஏ.க்கு எதிராக போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.எல்.ஏ. ‌மீது இ.பி.கோ.பிரிவு 332 ( பணியிலிருந்த அரசு ஊழியரரை தாக்கியது , பிரிவு 352 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையினை போலீசார் பதிவு செய்தனர்.

Nanri :- Dhinakaran News

No comments:

Visitors