பெட்ரோல் விலை, நாடு முழுவதும் லிட்டருக்கு 2.75 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த டிச., 15ல் விலை உயர்த்தப்பட்ட நிலையில், ஒரு மாத இடைவெளியில் இரண் டாவது முறையாக பெட்ரோல் விலை எகிறியுள்ளது. இது, மக்களிடம் கடும் அதிர்ச்சி அலை களை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு கடந்த 2010, ஜூன் 26ல் அனுமதி வழங்கியது. விலை உயர்வுக்கு முன் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும் எனவும் கூறியது. இதையடுத்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த டிச., 15ல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 86 அமெரிக்க டாலராக உயர்ந்தது. இதனால், பெட்ரோல் விலை 2.96 ரூபாய் உயர்ந்தது. ஒரு லிட்டர் 60.47 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 92 அமெரிக்க டாலராக சமீபத்தில் உயர்ந்தது. இதனால், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.00 மணி முதல் லிட்டர் பெட்ரோலுக்கு 2.75 ரூபாய் உயர்த்தப்பட்டு, 63.21 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 92 அமெரிக்க டாலராக உயர்ந் துள்ளதே இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என்றும், தவிர்க்க முடியாத காரணங்களால் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன; இதை மத்திய அரசும் ஏற்றுக்கொண் டுள்ளது. விலைவாசி உயர்வால் ஏற்கனவே மக்கள் விழிபிதுங்கும் நிலையில் அடுத்தடுத்து பெட்ரோல் விலையும் எகிறி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட பெட்ரோல் பங்க் டீலர்ஸ் சங்க தலைவர் செல்வராஜ் வேலுசாமி கூறுகையில், ""அரிசி, பருப்பு, எண் ணெய், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ""இந்நிலையில், பெட்ரோல் விலையும் உயர்த்தப்பட்டிருப் பது மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தும். ""தமிழகத்தில் பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த, மாநில விற்பனை வரியை தமிழக அரசு கணிசமான அளவு குறைத்தால், விலை உயர்வை தடுக்க முடியும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
Nanri :- Dhinakaran News
No comments:
Post a Comment