முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 17, 2011

மின் சப்ளை வழங்குவதில் தாமதம்ஊழியர்கள் மீது மக்கள் புகார்

பெ.முத்துகிருஷ்ணன்-
குடியிருப்பு பகுதிக்கு கூடுதல் மின்சாரம் வழங்க அனைத்து கட்டமைப்பு பணிகளும் முடிந்து ஒன்றரை மாதமாகியும் மின் சப்ளை துவக்கப்படவில்லை என அரண்வாயல்குப்பம் கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயல் ஊராட்சிக்கு உட்பட்டது அரண்வாயல்குப்பம். திருப்பதி - சென்னை நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமத்தில் பாரதியார் நகர் உள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இந்நகரில் உள்ளன.குடியிருப்புகளின் திடீர் பெருக்கம் மற்றும் புதிதாக ஏற்றுமதி நிறுவனங்களின் வருகை போன்ற காரணங்களால் இப்பகுதிக்கு வினியோகிக்கப்பட்டு வரும் மின்சாரம் போதுமானதாக இல்லை. இதனால், தனியாக டிரான்ஸ்பார்மர் அமைத்து கூடுதல் மின்சாரம் வினியோகிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, இரு மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலையை ஒட்டி டிரான்ஸ்பார்மர் அமைத்து, கூடுதல் வோல்டேஜ் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒன்றரை மாதங்களுக்கு முன்பே அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டது. எனினும், மின் வினியோகம் துவக்கப்படவில்லை.மின் சப்ளை வேண்டுமென்றால் தங்களை "கவனிக்க' வேண்டும் என மின் ஊழியர்கள் சிலர் கூறியதாகவும், குறிப்பிட்ட தொகையை தர மறுத்துவிட்டதால் மின் வினியோகத்தை வேண்டுமென்றே இழுத்தடிப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் இரு நாட்களுக்கு முன்பு லாரி ஒன்று மோதி தள்ளி சேதப்படுத்திவிட்டது. இதனால், கம்பிகள் அறுந்து கிடக்கின்றன. இவற்றை மீண்டும் சீரமைத்து மின் சப்ளையை துவக்க இன்னும் கூடுதலாக "உபய தொகை'யை ஊழியர்கள் கேட்கக்கூடும் என அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

Nanri :-Dhinakaran News

No comments:

Visitors