முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 19, 2011

உலகக் கோப்பை கிரிக்கெட் இன்னும் 31 நாள்கள்

1992-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வெற்றது.

இந்த 5-வது உலகக் கோப்பை போட்டியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தின.

 ÷இந்த உலகக் கோப்பையில்தான் வீரர்களுக்கு பல்வேறு நிறங்களில் உடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தென்னாப்பிரிக்க அணி இந்தப் போட்டியில் முதல்முறையாகக் கலந்து கொண்டது.

 ÷இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத்தீவுகள், ஜிம்பாப்வே ஆகிய 9 அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன.

 ÷"ரவுண்ட் ராபின்' முறை ஆட்டங்கள் நடத்தப்பட்டன. இதன்படி அனைத்து அணிகளும் பிற அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். ÷நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் முதல் நான்கு இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

 ÷முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை வென்றது. பாகிஸ்தானின் இன்சமாம் உல்-ஹக், 37 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

 ÷இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய இங்கிலாந்து 45 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது.

 ÷அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா வெற்றியை நெருங்கியபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. அப்போது 13 பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது விதிகளின்படி தென்னாப்பிரிக்கா 1 பந்தில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என அறிவிக்கப்பட்டது. இதனால் தென்னாப்பிரிக்கா பரிதாபமாக வெளியேறியது. இங்கிலாந்து 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

 ÷ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 6 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 49.2 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 ÷இதன் மூலம் 22 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. இம்ரான் கான் தலைமையில் அந்த அணி உலகக் கோப்பையை வென்றது

No comments:

Visitors