முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Feb 10, 2011

முத்துப்பேட்டை செம்படவான்காடு ரயில்வே கேட் அருகே மளிகை கடை தீப்பிடித்து எரிந்தது


 


முத்துப்பேட்டை செம்படவான்காடு ரயில்வே கேட் அருகே மளிகை கடை வைத்துள்ளவர் அலாவுதீன்(45). இவர் நேற்றிரவு கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை இவரது கடை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பக்கத்தில் இருந்த பொன்முடி(30) என்பவரின் சைக்கிள் கடைக்கு பரவியது. தகவல் அறிந்த முத்துப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதில் 2 கடைகளிலும் இருந்த 2பிரிட்ஜ், மளிகை பொருட்கள், 15சைக்கிள்கள் சாம்பலானது. இதன்மதிப்பு ரூ.1லட்சம். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 
முத்துபேட்டைORG   நியூஸ்காக தீன்

No comments:

Visitors