Jan 2, 2011
உலகிலேயே நீளமான கடல் பாலம் சீனா திறப்பு
லண்டன்: சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள கிங்டாவோ நகரையும் ஹூவங்டோ நகரையும் இணைக்க கூடிய கடல் வழி பாலம் உலகிலேயே நீளமான பாலம் என்ற பெருமையை கொண்டுள்ளது. இந்த பாலம் லண்டன் நகரில் தேம்ஸ் நதியில் உள்ள பாலத்தை காட்டிலும் 174 மடங்கு அதிகமாகும். இந்த பாலம் 5.5 பில்லியன் பவுண்டுகள் செலவில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வந்துள்ளது. பாலங்கள் முழுவதும் கம்பியூட்டர் மூலம் கணக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை பயன்படுத்துவதன் மூலம் மேற்கண்ட இரு நகரங்களுக்கும் செல்லும் தூரம் 30 கி.மீ வரை குறையும். பயண நேரமும் குறைந்துள்ளது. ஆறுவழிச்சாலையாக உள்ள இந்த பாலம் நிலநடுக்கம் ஏற்படும் காலகட்டங்களில் ரிக்டர் அளவுகோலில் 8.0 அளவு வரை தாங்கும் திறனை கொண்டுள்ளது எனவும், ஹதாங்காங்சுற்றுலாத்துறை, வர்த்தகம் மேம்பாடு அடையும் என்றும் ஹாங்காங் அதிகாரி டொனால்டு டிஷாங் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment