முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 2, 2011

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி - வெங்காயம் விலை குறையும்

புதுடெல்லி, : நாடு முழுவதும் வெங்காயம் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி வெங்காயம் வரும் 7ம் தேதி டெல்லி மற்றும் பிற பகுதிகளுக்கு வந்து சேர்ந்ததும், விலை குறையும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர் மழையால் வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இருப்பும் குறைந்ததால், நாடு முழுவதும் வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ 90 வரையில் உயர்ந்தது. சென்னையில் ஒரு கிலோ வெங்காயம் 65 வரையில் விற்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்தது. இதையடுத்து, மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. மேலும் பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுத்தது.   அரசு வர்த்தக கார்ப்பரேஷன் (எஸ்.டி.சி) மூலம் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் வாகா எல்லை வழி யாக லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. 7ம் தேதி டெல்லி மற்றும் பிற மாநிலங்களின் மார்க்கெட்டுக்கு வந்து சேர்ந்ததும் வெங்காயம் விலை படிபடியாக குறையும் என்று மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Visitors