முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 16, 2010

நீரா ராடியா அலுவலகங்களில் சோதனை

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தொலைத் தொடர்பு நிறுவனங்களும், தொலைத் தொடர்புத் துறை அமைச்சருக்கும் இடையே தரகராகச் செயல்பட்டதாக கூறப்படும் வைஷ்ணவி கம்யூனிகேஷன் நிறுவனத் தலைவர் நீரா ராடியாவின் அலுவலகங்கள், பண்ணை வீடு, அவரது நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதுபோல் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால், ஹவாலா தரகர்கள் என்று கூறப்படும் மகேஷ் ஜெயின், அலோக் ஜெயின் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதோடு அவர்களிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.


நீரா ராடியாவின் தில்லி பண்ணை வீட்டில் சோதனை செய்த பின் அங்கிருந்து வெளியேறும் சிபிஐ அதிகாரிகள்.

தில்லியில் சிபிஐ அதிகாரிகள் மட்டுமன்றி அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர்.
மூன்றாண்டுகள் டிராய் தலைவராக இருந்த பைஜால்  2006-ல் ஓய்வு பெற்றார். அதன் பிறகு நீரா ராடியாவுக்குச் சொந்தமான நோசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சில தனியார் நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் அவர் சில பரிந்துரைகளை அரசுக்கு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ஹவாலா தரகர்கள் மகேஷ் ஜெயின், அலோக் ஜெயின் இருவரிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். இவர்களுக்கும் முன்னாள் அமைச்சர் ராசாவுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்ற அடிப்படையிலும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.


தில்லியில் கோபால் தாஸ் பவனில் நீரா ராடியாவுக்குச் சொந்தமான வைஷ்ணவி கம்யூனிகேஷன் நிறுவன அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டபோது, பரபரப்போடு வெளியே காத்திருக்கும் செய்தியாளர்கள்.

தில்லியில் செüரி பஜார் பகுதியில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனையிட்டனர். முன்னாள் தொலைத் தொடர்புத் துறை செயலர் சித்தார்த் பெகுரா, தொலைத்தொடர்பு ஆணைய உறுப்பினர் கே.ஸ்ரீதர், தொலைத்தொடர்புத் துறை துணை இயக்குநர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா ஆகியோரது வீடுகளிலும் அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ள தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர்.

No comments:

Visitors