முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 16, 2010

லண்டன் செஸ்: ஆனந்த் முன்னிலை

லண்டன், டிச.15: லண்டனில் நடைபெற்று வரும் லண்டன் கிளாசிக் செஸ் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் 10 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.
நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்ùஸன், இங்கிலாந்து வீரர் லூக் மெக்ஷேன் ஆகியோரும் 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளனர்.
புதன்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்று (6-வது சுற்று) ஆட்டத்தில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த், இங்கிலாந்து வீரர் மைக்கேல் ஆடம்ûஸ எதிர்கொண்டார். இருவரும் சிறப்பாக விளையாடியபோதும் 54-வது நகர்வில் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.
இறுதிச்சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் ரஷியாவின் கிராம்னிக்கை எதிர்கொள்கிறார்.
முன்னிலை விவரம்: விஸ்வநாதன் ஆனந்த் (10 புள்ளிகள்), மேக்னஸ் கார்ல்ùஸன் (10 புள்ளிகள்), லூக் மெக்ஷேன் (10 புள்ளிகள்) ஆகியோர் முதலிடத்திலும், அமெரிக்க வீரர் நாகமுரா ( 9 புள்ளிகள்), ரஷிய வீரர் கிராம்னிக் (9 புள்ளிகள்) ஆகியோர் 4-வது இடத்திலும் உள்ளனர்

No comments:

Visitors