லாஸ் ஏஞ்சல்ஸ், டிச.17-
சென்னையை சேர்ந்த பிரபல சினிமா பின்னணி இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கடந்த 2009-ம் ஆண்டு “சிலம்டாக் மில்லினர்” என்ற சினிமா படத்துக்கு இசை அமைத்ததற்காக ஆஸ்கார் பரிசு பெற்றார். இதே வரிசையில் அவருக்கு மேலும் 2 ஆஸ்கார் பரிசுகளும் கிடைத்தன.
இந்த நிலையில் இந்த ஆண்டு அவர் மீண்டும் ஆஸ்கார் பரிசு பெறும் போட்டி வரிசையில் இருக்கிறார். 44 வயதான அவர் “127 மணி நேரம்” என்ற ஆங்கில சினிமாவில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு சிறப்பான முறையில் இசை அமைத்து இருக்கிறார். அந்த பாடலுக்கான இசை அமைப்புக்கு, இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் பரிசு கிடைக்குமா? என்பது ஜனவரி 6-ந்தேதி தெரிய வரும்.
ஏ.ஆர்.ரகுமானுக்கு “கோல்டன் குளோப்” விருது கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment