முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 19, 2010

பேஸ்புக் இணையதளத்தில் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட 103 வயது மூதாட்டி

லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த 103 வயது மூதாட்டியும் பேஸ்புக் சமூக இணையதளத்தில் தன்னை பதிவு செய்து கொண்டுள்ளார். இந்த இணையதளத்தின் மூத்த  உறுப்பினர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.பேஸ்புக் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. லிலியன் லோபே (வயது 103), இங்கிலாந்தைச் சேர்ந்த இவருக்கு 7 பேரக் குழந்தைகளும் 13 கொள்ளுப் பேரக்  குழந்தைகளும் உள்ளனர்.
பேஸ்புக் இணையதளத்தில் ஏராளமானோர் தங்களை இணைத்துக் கொண்டுள்ளது பற்றி கேள்விப் பட்டதும் தன்னையும் இதில் இணைத்துக் கொள்ள முடிவு செய்தார். ஐபேட்  மூலம் தன்னை இந்த இணையதளத்தில் இணைத்துக் கொள்கிறார் லோபே. அதன் மூலம் அவர் தினமும் தனது பிள்ளைகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் தகவல்களை  பகிர்ந்து கொள்கிறார்.

இது பற்றி லோபே கூறுகையில், “பேஸ்புக்கில் உறுப்பினராக சேர்ந்தது என் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வு ஆகும். இதன் மூலம் எனது குடும்ப உறுப்பினர்களுடன் என் எண் ணங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. மேலும் உலக விஷயங்களையும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. என்னைப் போன்ற மூத்த குடிமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால், வாழ்க்கையில்  மன அழுத்தம் இல்லாமல் அமைதியாக இருக்கலாம். முதுமையில் இந்த வாய்ப்பை அளித்த பேஸ்புக் இணையதளத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்Ó என்று மகிழ்ச்சியு டன் கூறியுள்ளார்.

No comments:

Visitors