முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 19, 2010

2வது இன்னிங்சில் போராடுகிறது இந்தியா

செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் டெஸ்டில், இந்தியா 2வது இன்னிங்சில் போராடி வருகிறது.
செஞ்சுரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், இந்தியா முதல் இன்னிங்சில் 136 ரன்னுக்கு சுருண்டது. தென் ஆப்ரிக்கா 2ம் நாள் முடிவில் 2  விக்கெட் இழப்புக்கு 366 ரன் எடுத்திருந்தது. அம்லா 116, காலிஸ் 102 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். அம்லா 140 ரன் (202 பந்து, 14 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து இஷாந்த் வேகத்தில் ஆட்டமிழந்தார். அ டுத்து காலிஸ் & டிவில்லியர்ஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு அதிரடியாக ரன் குவித்தது. டிவில்லியர்ஸ் 75 பந்தில் சதம் விளாசி (11 பவுண்டரி, 5 சிக்சர்) அசத்தினார். மறு  முனையில் அபாரமாக விளையாடிய காலிஸ், டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார்.
டிவில்லியர்ஸ் 129 ரன் எடுத்து (112 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழந்ததும், தென் ஆப்ரிக்கா 4 விக்கெட்டுக்கு 620 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை  டிக்ளேர் செய்தது. காலிஸ் 201 ரன் எடுத்து (270 பந்து, 15 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் இன்னிங்சில் 484 ரன் பின்தங்கிய நிலையில் இந்தியா  2வது இன்னிங்சை தொடங்கியது. சேவக் & கம்பீர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 137 ரன் சேர்த்தது. சேவக் 63, கம்பீர் 80 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்தியா 44.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 190 ரன் எடுத்து போராடி வருகிறது. டிராவிட் 28*, இஷாந்த் 7* களத்தில் உள்ளனர்.

No comments:

Visitors