முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 29, 2010

2 ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்னையை சட்டசபையிலும் கிளப்புவோம் : மார்க்சிஸ்ட் ராமகிருஷ்ணன்

திண்டுக்கல் :""2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்னையை, சட்டசபையில் கிளப்போம்'', என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கூறினார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: ஸ்பெக்ட்ரத்தில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவும் ஒரு வகையான ஊழல் தான். இலவசமாக "டிவி', உர மானியம், ஒரு கிலோ அரிசி ஆகியவை கொடுக்கும் போது அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இது ஊழலாகுமா என தி.மு.க., வினர் பொய் பிரசாரம் செய்கிறார்கள்.
இந்தியாவில் இதுவரை நடந்திராத ஊழல் இது. ராஜாவை காப்பாற்ற, தி.மு.க., தவறான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. வரும் சட்டசபை கூட்டத்தில் மார்க்சிஸ்ட் இப்பிரச்னை குறித்து விவாதிக்கும். அரசு கான்கிரீட் வீடு வழங்கும் திட்டத்தில் 3 லட்சம் பேருக்குத்தான் இந்தாண்டு வீடு வழங்கப்படுகிறது. ஆனால், 21 லட்சம் பேருக்கு அடையாள அட்டை
வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் தி.மு.க.,விற்கு ஓட்டு போட வேண்டும் என்பதற்காக, அடுத்த ஆண்டு வீடு கட்டுவதற்கு இந்தாண்டே அடையாள அட்டை தி.மு.க.,வினர் கொடுத்து வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கதாகும். கூட்டணி குறித்து மாநிலக்குழு கூடி, முடிவெடுக்கும், என்றார்.

No comments:

Visitors