முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Dec 29, 2010

நடுவானில் பயணி மரணம்: குடும்பத்துக்கு ரூ. 12 லட்சம்

மும்பை: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் லெப்டினன்ட் கர்னல் சுதிர் குமார் (76). இவர் கடந்த மே 27ம் தேதி ஜெட்லைட் விமானத்தில் மும்பை புறப்பட்டார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதுகுறித்து விமானிக்கு உடனடியாக தகவல் தரப்பட்டது. அவர் விமானத்தை லக்னோவுக்கு திருப்பாமல் மும்பை கொண்டு சென்றார்.

மும்பை விமான நிலைய டாக்டர்கள் சுதிர்குமாரை பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சுதிர்குமாரின் மகள் தீபிகா சோகன், விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் புகார் செய்தார்.

ஜெட்லைட் விமான நிறுவனத்தின் அலட்சியம் காரணமாகவே தனது தந்தை உயிரிழந்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இதை விசாரித்த விமான போக்குவரத்து துறை இயக்குநர் ஸ்ரீவத்சவா, ஜெட்லைட் விமான நிறுவனத்தின் சேவை குறைபாடு காரணமாக பயணி உயிரிழந்திருப்பதால் விமான போக்குவரத்து சட்டம் 1972 ன்படி ரூ.12 லட்சத்தை நஷ்டஈடாக ஒரு வாரத்துக்குள் பயணியின் குடும்பத்துக்கு வழங்க உத்தரவிட்டார்.

No comments:

Visitors