திருவாரூர், ஜன.27: திருவாரூர் அருகே வைப்பூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று மதியம் சத்துணவு சாப்பிட்ட 31 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர்கள் திருவாரூர் அரசுக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஆபத்து ஒன்றும் இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment