முக்கிய செய்திகள்

பொறியியல் படிப்பு இலவசம் / நவீனப்படுத்தப்பட இருக்கும் புதிய சென்னை விமானநிலையம் / உலக அழிவும், மாயா இன மக்களும்' / மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்​கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு / எமிரேட்ஸ் ஐ.டி. அபராதம் பீதி தெளிந்தது.​... / முறைகேடாக வழங்கப்பட்ட 122 2ஜி லைசென்ஸ்களும் ரத்து!!!

Jan 25, 2012

புயல் நிவாரணத்துக்கு இன்று ஒரு நாளில் ரூ.4 கோடி முதல்வரிடம் அளிப்பு

சென்னை, ஜன.25: தானே புயல் நிவாரணப் பணிகளுக்காக இன்று ஒரு நாளில் மட்டும் தமிழக முதல்வரிடம் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 4 கோடியே 15 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அரசின் செய்திக் குறிப்பு:
30.12.2011 அன்று தமிழகத்தை தாக்கிய ‘தானே’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று (25.1.2012) தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்து சிலர் நிதியுதவி வழங்கினர். அவ்வகையில் ரூ.4கோடியே 15லட்சம் நிவாரண நிதிக்கு சேர்ந்துள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் துரைசாமியின் சொந்த பங்களிப்பான ரூ.3 லட்சம்
சேர்த்து – 1 கோடி ரூபாய்
முருகப்பா குழுமத்தின் செயல் தலைவர் ஏ.வெள்ளையன் - 1 கோடி ரூபாய்
சுஸ்லான் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் . துள்சி ஆர். டான்டி – 1 கோடி ரூபாய்
வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் .எம்.வி. முத்துராமலிங்கம் மற்றும் தாளாளர் . எம்.வி.எம். வேல்முருகன் - 50 லட்சம் ரூபாய்
கும்மிடிப்பூண்டி, ஆர்.எம்.கே. இன்ஜினியரிங் கல்லுரியின் தலைவர்  
ஆர். முனிரத்தினம் மற்றும் துணைத் தலைவர் . ஆர்.எம். கிஷோர் - 25 லட்சம் ரூபாய்
சென்னை, விஜயா குழும மருத்துவமனைகளின் முதன்மை செயல் அலுவலர் மதி. பி. பாரதி ரெட்டி – 20 லட்சம் ரூபாய்
திருச்செங்கோடு, வித்யா விகாஸ் கல்வி நிலையங்கள் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாக பொறுப்பாளர் டாக்டர் டி.ஓ. சிங்காரவேல் – 10 லட்சத்து 8 ரூபாய்
கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசுவாமி -  10 லட்சம் ரூபாய்
இதையும் சேர்த்து இதுவரை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட தொகை 24 கோடியே 27 லட்சத்து 42 ஆயிரத்து 932 ரூபாய் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Nantri - Thinamani news

No comments:

Visitors