அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில், இந்திய அணி வழக்கம் போல சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. இத்தொடரின் 7 இன்னிங்சில், 6வது முறையாக டிராவிட் போல்டானார்.
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 335 ரன்கள் எடுத்திருந்தது.
அதிரடி ரன் குவிப்பு:
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. கிளார்க், பாண்டிங் இணைந்து தொடர்ந்து சிறப்பான முறையில் ரன்கள் குவித்தனர். வேகமான ரன்கள் குவித்த கிளார்க், டெஸ்ட் அரங்கில் இரண்டாவது முறையாக, இரட்டை சதம் அடித்தார். இவர் 210 ரன்கள் எடுத்த போது, உமேஷ் யாதவ் பந்தில் போல்டானார்.
மறு முனையில் பாண்டிங் தன்பங்கிற்கு இரட்டை சதம் அடித்து அசத்தினார். இவர் 221 ரன்களுக்கு வெளியேறினார். ஹசி (25), சிடில் (2) அடுத்தடுத்து அவுட்டாகினர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 604 ரன்கள் எடுத்து "டிக்ளேர் செய்தது. ஹாரிஸ் (35), ஹாடின் (42) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அஷ்வின் 3, ஜாகிர் கான் 2 விக்கெட் வீழ்த்தினர்.
சேவக் "அவுட்:
பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு சேவக், காம்பிர் ஜோடி துவக்கம் தந்தனர். மிகப்பெரிய இலக்கை துரத்துகிறோம், நல்ல துவக்கம் தரவேண்டும் என்ற பொறுப்பு இல்லாமல் விளையாடிய சேவக், 18 ரன்னுக்கு அவுட்டாகி வெறுப்பேற்றினார். டிராவிட் (1) மீண்டும் போல்டானார்.
பின் வந்த சச்சின், காம்பிருடன் இணைந்து மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்து, 543 ரன்கள் பின்தங்கி இருந்தது. காம்பிர் (30), சச்சின் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

No comments:
Post a Comment